அதிகாரிகளின் திடீர் சோதனை நடவடிக்கையில் சிக்கிய அபாயகர பொருட்கள்!
மிருகங்களை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை புத்தளம் கருவலகஸ்வௌ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம் கருவலகஸ்வௌ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தின் அதிகாரிகள் நேற்று அப்பிரதேசத்தில் மேற்கொண்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து மிருகங்களை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் இரண்டு துப்பாக்கிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கருவலகஸ்வௌ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், மீட்கப்பட்ட வெடிமருந்து பொருட்களும் வனவிலங்கு குற்றங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.