வேலையற்ற பட்டதாரிகளுக்கான பயிற்சி ஆரம்பம்!

வேலையற்ற பட்டதாரிகளுக்கான பயிற்சி ஆரம்பம்!

சுபீட்சத்தின் நோக்கு’ என்ற ஜனாதிபதியின் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக அரச துறைகளில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 50,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் இன்று (திங்கட்கிழ்மை) ஆரம்பமாகவுள்ளது.

நாடு பூராகவும் உள்ள 51 இராணுவ மத்திய முகாம்களில் இந்த வேலைத்திட்டம் ஒரு மாத காலம் இடம்பெறும்.  ஒரு கட்டத்தின் கீழ் 10 ஆயிரம் பேர் என்ற அடிப்படையில் 5 கட்டங்களில் பட்டதாரிகள் இந்தப் பயிற்சி நெறிக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இப் பயிற்சயில் தலைமைத்துவம், முகாமைத்துவம், வினைத்திறனாக செயற்படும் முறை உள்ளிட்ட விடயங்கள் பட்டதாரிகளுக்கு விளக்கமளிக்கப்படும்.