நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து- காவல்துறை உத்தியோகத்தர் பலி
நிட்டம்புவ-ஹொரகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபததில் காவல்துறை காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கடமைகள் நிறைவடைந்தவுடள் இவர்கள் இருவரும் வீடுகளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவர்கள் பயணித்த உந்துருளி வீதியை விட்டு விலகி அருகில் நிறுத்தப்பட்டிருந்த மகிழூந்து மற்றும் ஜீப் ரக வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தர் பேலியகொடை வாகன போக்குவரத்து பிரிவில் கடமையாற்றிவந்த பஸ்யால பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் காயமடைந்த கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.