நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் நேற்றைய தினம் 39 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 16 பேருக்கும், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 12 பேருக்கும் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் நேற்றைய தினம் தொற்றுறுதியானது.
அத்துடன் தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பிய உக்ரைன் பிரஜை ஒருவருக்கும்; எத்தியோப்பியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும், குவைட்டில் இருந்து நாடு திரும்பிய 6 பேருக்கும் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுதவிர செங்கடல் பிராந்திய கடலோடி ஒருவருக்கும் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானது
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 234 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் கொவிட்19 நோய்த்தொற்றுதியான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிகை 226 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 13 பேர் நேற்றைய தினம் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 996 ஆக அதிகரித்துள்ளது.