ஜனாதிபதி கோட்டாபயவின் பணிப்புரை! மஹிந்த எடுத்த திடீர் முடிவு

ஜனாதிபதி கோட்டாபயவின் பணிப்புரை! மஹிந்த எடுத்த திடீர் முடிவு

20வது அரசியலமைப்பு திருத்தம் அமைச்சரவைக்கு தெரியாமலேயே தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

20ஆவது திருத்தத்தை மீண்டும் ஆராயும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச குழு அமைத்துள்ளார்.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன பேசியதாவது, 20வது திருத்தம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதனாலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ச திடீரென குழு அமைத்திருக்கிறார். ஆளும் கட்சிக்குள்ளேயே 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கடுமையான முரண்பாடுகள் எழுந்திருக்கின்றன.

குறிப்பாக 20வது அரசியலமைப்பு திருத்தம் அமைச்சரவைக்கு தெரியாமலேயே தயாரிக்கப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் 20வது திருத்தம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள்ளேயே கருத்து முரண்பாடுகள் எழுந்தநிலையில் அது தொடர்பில் ஆராய பிரதமர் நேற்று அமைச்சர் ஜிஎல் பீரிஸ் தலைமையில் குழு ஒன்றை நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.