இலங்கை தமிழரசு கட்சியின் புதிய பொதுச்செயலாளர் தொடர்பில் சம்பந்தனின் கருத்து
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய பொதுசெயலாளர் தொடர்பில் கட்சியின் பொதுக்குழுவே தீர்மானிக்கும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரைராசசிங்கம் கடந்த 11 ஆம் திகதி கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு இது தொடர்பான கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.
குறித்த கடிதத்தின் பிரதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் பொதுசெயலாளர் பதவியில் இருந்து அவர் விலகுவதாக அறிவிக்கும் கடிதம் தமக்கு கிடைத்திருப்பதாகவும், அது தொடர்பாக விரைவில் பொதுக்குழு கூடி தீர்மானம் எடுக்கும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.