ஒரு வருடத்தில் நாடாளுமன்றை கலைக்க 13 மில்லியன் பேர் வாக்களிக்கவில்லை
ஒருவர் ஒரு வருடத்தில் கலைக்கக்கூடிய அரசாங்கத்தை நாடாளுமன்றத்தில் உருவாக்குவதற்காக 13 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில்
20வது திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கிய முதலாவது பாரிய முக்கிய நடவடிக்கை.
ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கான மக்களின் உரிமை 20 ஆவது திருத்தத்தின் மூலம் பறிக்கப்படுகின்றது
ஜனாதிபதியை சுற்றி அதிகாரமையமொன்று உருவாக்கப்படுகின்றது.
எனவே 20வது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.