தொழிலாளர்களின் வேலைத்திறனை அதிகரிக்க முதலாளிமார் செய்யும் வேலை - வெளிவரும் அதிர்ச்சிகர தகவல்

தொழிலாளர்களின் வேலைத்திறனை அதிகரிக்க முதலாளிமார் செய்யும் வேலை - வெளிவரும் அதிர்ச்சிகர தகவல்

தமது தொழிலாளர்களின் வேலைத்திறனை அதிகரிப்பதற்காக அவர்களுக்கு முதலாளிமார் போதைப்பொருட்களை வழங்குவதாக பொலிஸார் அதிர்ச்சி தகவலொன்றை தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கே இவ்வாறு போதைப்பொருட்கள் வழங்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேல்மாகாணத்தில் சனிக்கிழமை இது தொடர்பான விசேட சோதனை நடவடிக்கை இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த 48 தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

6500 தொழிலாளர்களை சோதனைசெய்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.