கணவர் மற்றும் பிள்ளைகளுடன் உறங்கிக் கொண்டிருந்த ஆசிரியைக்கு ஏற்பட்ட நிலை
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தாலி பறித்தெடுக்கப்பட்டுள்ளது.
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தாலியை கத்தியை வைத்து பறித்தெடுத்த திருடன் தப்பிச்சென்றுள்ளார்.
ஆரையம்பதி பிரதான வீதியிலுள்ள பாடசாலை ஆசிரியையான பெண் தனது வீட்டில் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மாலையை பறித்த போது அப்பெண் கூச்சலிடவே மாலையை பறித்தெடுத்துக் கொண்டு தப்பியோடியதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் சந்தேகநபரைகைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெறுவதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி நேற்று தெரிவித்தார்.