வயல் நிலமொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 2 மோட்டார் குண்டுகள்

வயல் நிலமொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 2 மோட்டார் குண்டுகள்

ஹோமாகம-மாகம்மன-தொலேகடே பிரதேசத்தில் உள்ள ஒரு வயலில் இருந்து இரண்டு மோட்டார் குண்டுகளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

நெல் வயலுக்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்த குண்டுகள் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த குண்டுகள் இரண்டும் செயலிழக்கச் செய்வதற்காக இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹோமாகம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.