மட்டக்களப்பு மக்களை அச்சுறுத்தி வந்த தனுவின் உதவியாளர் இருவர் கைது

மட்டக்களப்பு மக்களை அச்சுறுத்தி வந்த தனுவின் உதவியாளர் இருவர் கைது

மட்டக்களப்பு பிரதேசத்தில் மக்களை அச்சுறுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தனுராஜ் என்ற தனுவின் கும்பலைச் சேர்ந்த மேலும் இரண்டு உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே குறித்த குழுவின் தலைவரான தனு கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இன்றைய தினம் மேலும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த கும்பல் மட்டக்களப்பு-மாங்கேனி பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி பல்வேறு வன்முறைச் செயல்களில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளதாக காவல்துறையினருக்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.