தொடர்ந்தும் நீடிப்பேன் - மகிந்த தேசப்பிரிய ஆரூடம்
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 15ஆம் திகதி பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு தீர்மானித்திருந்த நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
எனது பதவிக்காலம் முடிவடையும் வரை அல்லது புதிய ஆணையாளர் நியமிக்கப்படும் வரை நான் பதவியில் தொடர்ந்து நீடிக்க தீர்மானித்துள்ளேன்.
15ஆம் திகதிக்கு பின்னர் நீடித்த விடுப்பினை எடுக்க தீர்மானித்திருந்தேன்.
ஆனால் தற்போது அந்த எண்ணத்தை கைவிட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.