இலங்கையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குகை கண்டுபிடிப்பு! வெளிவந்த ஆச்சரியம் மிக்க தகவல்

இலங்கையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குகை கண்டுபிடிப்பு! வெளிவந்த ஆச்சரியம் மிக்க தகவல்

வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த ஃபஹியன் குகைக்கு ஒத்த வரலாற்று பின்னணியைக் கொண்ட மற்றொரு தனித்துவமான குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

களுத்தறையில் வலல்லாவிவிட பகுதியில் உள்ள குலவிதா என்ற இடத்தில் ஒரு மலையடிவாரத்தில் குறித்த குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் முன்னர் வெளியான போதும் தற்போது அதன் மேலதிக கவல்கள் வெளிவந்துள்ளன.

சுமார் 48,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகளைக் கூறும் இந்த குகை ஃபஹியன் குகை போல பழமையானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த குகை குறித்த முதற்கட்ட விசாரணைகள் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் மனிதர்கள் வசித்து வந்ததற்கான தகவல்களையும் ஆதாரங்களையும் கண்டுபிடித்துள்ளதாக தொல்பொருள் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவ்வாறிருக்க குறித்த குகையை களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுப பஸ்குவல் நேற்று நேரில் சென்று இடத்தை பார்வையிட்டு அதன் வரலாற்று பின்னணியை விசாரித்தனர்.

இந்த இடத்தைச் சுற்றி பல குவாரிகளும் உள்ளன, மேலும் அரிப்பு காரணமாக பாறை அடுக்குகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார்.