அதிரடியாக கைது செய்யப்பட்ட 699 பேர்
மேல் மாகாணத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், போதைப்பொருட்களுடன் 699 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பேருந்து மற்றும் தொடருந்து தரிப்பிடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இந்தக் கைதுகள் இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
101 கிராம் 259 மில்லிகிராம் ஹெரோயினுடன் 261 பேரும், 844 கிராம் 84 மில்லிகிராம் கஞ்சாவுடன் 184 பேரும், 650 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் 166 பேரும், 9 கோடா பீப்பாய்களுடன 10 பேரும், 27 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 32 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.