தீப்பிடித்த கப்பல் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்
ஸ்ரீலங்காவின் கிழக்கு கடற்பரப்பில் தீப்பிடித்த நிலையில் ஸ்ரீலங்கா - இந்திய கடற்படைகளின் அதீத போராட்டங்களுக்கு மத்தியில் தீ அணைக்கப்பட்ட எம்.டி நியூ டயமன்ட் எண்ணெய்க் கப்பல் தற்சமயம் மட்டக்களப்பு கடற்பரப்பிலிருந்து சுமார் 45 மைல் தொலைவில் இருப்பதாக ஸ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த கப்பலின் தென்பகுதியிலிருந்து எண்ணெய் கடலில் கலந்துள்ளதை கடற்படை உறுதிசெய்துள்ளது.
தொடர்ந்தும் எண்ணெய் கடல்நீரில் கலப்பதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கடற்படை, கடலோரக் காவற்படை, இந்திய கடலோரக் காவற்படை இம்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.