இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
2019இல் குறைந்த விமானப் பயணிகள் போக்குவரத்துப் பணிகளின் காரணமாக போக்குவரத்துப் பணிகளின் மிகை சுருக்கமடைந்திருந்தாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பயணிகள் கட்டணங்கள், வர்த்தக பண்ட கட்டணங்கள், துறைமுக மற்றும் விமான நிலையத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளை உள்ளடக்குகின்ற போக்குவரத்துப் பணிகளின் மொத்தப் உட்பாய்ச்சல்கள் 2018ல் 2 ஆயிரத்து 486 மில்லியன் டொலருடன் ஒப்பிடுகையில், 2019ல் 2 ஆயிரத்து 339 மில்லியன் டொலராக இருந்தது.
ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர், விமானப் பயணிகள் போக்குவரத்துப் பணிகளின் வீழ்ச்சி இதற்கு காரணமாக அமைந்ததாக இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.