தீப்பிற்றிய எம்.டி.நிவ் டயமன்ட் கப்பல் தொடர்பில் வெளியான தகவல்..!

தீப்பிற்றிய எம்.டி.நிவ் டயமன்ட் கப்பல் தொடர்பில் வெளியான தகவல்..!

தீப்பிற்றிய எம்.டி.நிவ் டயமன்ட் கப்பல் கரையிலிருந்து 56 கடல் மைல் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கப்பலில் உள்ளே கடல் நீரை பெற்றுக்கொள்ளும் இரண்டு குழாய் கட்டமைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, சேதமடைந்த குழாய்களை திருத்துவதற்கான நடவடிக்கைகளில் கடற்படையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

அத்துடன் கப்பலின் தெற்கு பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதால் அது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதுடன், அதில் ஏற்பட்டுள்ள துவாரங்கள் ஊடாக கடலில் எண்ணெய் கசிவு ஏற்படாமல் இருப்பதற்கு அனைத்து துவாரங்களையும் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதேநேரம் தொடர்ந்தும் கடற்படையினர், கடற்பாதுகாப்பு அதிகார சபை, இந்திய கடற்படை ஆகியோர் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, பரிசோதனைகளுக்காக நிவ் டயமன்ட் கப்பலிலுள்ள எண்ணெய் மாதிரியை பெற்றுக் கொள்ளுமாறு கடற் பாதுகாப்பு அதிகார சபைக்கு நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் குறித்த கப்பலின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற்று கொள்வதற்கும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபருக்காக மன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் முன்வைத்த சமர்ப்பனங்களுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.