கொரோனா தொடர்பில் வெளியான விசேட செய்தி....!

கொரோனா தொடர்பில் வெளியான விசேட செய்தி....!

நாட்டில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 7 பேருக்கே கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 169 ஆக அதிகரித்துள்ளது,

நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான 2 ஆயிரத்து 969 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய தொற்றுறுதியான 188 பேர் தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்த 95 பேர் இன்று வீடு திரும்ப உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.