ஸ்ரீலங்காவை வெகுவாக பாராட்டிய அமெரிக்க தூதுவர்
எம்.டி நியூடயமண்ட் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா கடற்படையினரும் விமானப்படையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளை அமெரிக்க தூதுவர் பாராட்டியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் - பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இதன் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது ஸ்ரீலங்காவும் அமெரிக்காவும் எல்லை கடந்த குற்றங்களை தடுப்பது உட்பட பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டன.
இதேவேளை எல்லைகடந்த குற்றங்கள் போதைப்பொருள் கடத்தல் ஆள்கடத்தல் போன்றவை குறித்தும் அவற்றை கட்டுப்படுத்துவது மற்றும் அதனை தடுப்பதற்கான பயிற்சிகள் குறித்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.