இருவேறு இடங்களில் வாகன விபத்து - அறுவர் ஆபத்தான நிலையில்!
சாய்ந்தமருதில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஆறு பேர் படுகாயமுற்று ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாய்ந்தமருது - ரெட்சில்லிக்கு அருகாமையில் சிலமணி நேரம் முன்னதாக இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இடம்பெற்று சில நிமிடங்களில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்னால் மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது.
வேக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ ஒன்று எதிரில் வந்த பேருந்து மீது மோதியதில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.