திடீரென குளத்தில் குதித்த இளம் யுவதி! இறுதியில் நடந்த சோகம்
கட்டுகஸ்தோட்டையில் உள்ள சிறிய பாலத்திலிருந்து இளம் யுவதி ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த யுவதியின் சடலம் பிஹா ஓயாவில் இருப்பதை பிரதேசவாசிகள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இன்று காலை குறித்த யுவதி திடீரென ஆற்றில் விழுந்ததைக் கண்ட இளைஞர்கள் குழு அவரைக் காப்பாற்ற பெரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனும், அந்த யுவதி இறந்துவிட்டார். அவரது உடல் மகாவலி ஆற்றில் சேரும் பிஹா ஓயாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இறந்தவர் கட்டுகஸ்தோட்டையில் உள்ள யஹலதென்ன பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலையில் வேலை செய்யும் 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.