கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம்..!
இலங்கை மருத்துவ சபையின் சுயாதீன தன்மையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிடின் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ சங்கத்தின் நிறைவேற்று குழு நேற்று கூடிய போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் எமது செய்தி பிரிவு வினவிய போது அந்த சங்கத்தின் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனை குறிப்பிட்டார்.