
எண்ணெய் மாதிரியை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு...!
பரிசோதனைகளுக்காக நிவ் டயமன்ட் கப்பலிலுள்ள எண்ணெய் மாதிரியை பெற்றுக் கொள்ளுமாறு கடற் பாதுகாப்பு அதிகார சபைக்கு இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் குறித்த கப்பலின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற்று கொள்வதற்கும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபருக்காக மன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் முன்வைத்த சமர்ப்பனங்களுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.