எம்.ரி நிவ் டயமன்ட் கப்பல் தொடர்பில் தொடரும் ஆய்வுகள்..!

எம்.ரி நிவ் டயமன்ட் கப்பல் தொடர்பில் தொடரும் ஆய்வுகள்..!

இரண்டு தடவைகள் தீப்பற்றியிருந்த எம்.ரி நிவ் டயமன்ட் கப்பல் நிலைகொண்டுள்ள பகுதிக்கு அருகில் எண்ணெய் படிவுகள் உள்ளதா? என்பது குறித்து ஆராய சுழியோடிகள் குழு ஒன்றை கடற்படை நியமித்துள்ளது.

கடற்படை இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தீ விபத்துக்குள்ளான எம்.ரி நிவ் டயமன்ட் கப்பலில், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான பணிகளுக்கு செலவிடப்பட்ட பணத்தை, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இருந்து மீளப் பெற்றுக்கொள்ளவேண்டிய தேவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுத்திரவியல் மற்றும் கடற்படை சட்டம் தொடர்பான விசேட நிபுணரான கலாநிதி டேன் மாலிக குணசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எம்.ரி நிவ் டயமன்ட் கப்பலை இலங்கையின் கடல் பரப்பிற்கு அப்பால் கொண்டுசென்று கையளிக்கும்போது, அதில் மீண்டும் அபாய நிலை ஏற்படாது என்பதை உறுதியளிக்க வேண்டும்.

சர்வதேச பிரகடனத்திற்கு அமைய, இந்த பணியை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு இலங்கை கடப்பாடுடையதாக கலாநிதி டேன் மாலிக குணசேகர தெரிவித்துள்ளார்.