அரசின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அரசின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஸ்ரீலங்காவில் கடந்த 35 வருடகாலத்தில் சந்தித்திராத மோசமான வரவுசெலவுதிட்டத்தை எதிர்கொள்ள மக்கள் தயாராகயிருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ண எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கை தவறுகளே இதற்கு காரணம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்

சுகாதார நெருக்கடி தருணத்தில் சுகாதார நெருக்கடியையும் வாழ்வாதார நெருக்கடியையும் கையாள்வதற்காக செலவீனங்கள் அதிகரிப்பதை எதிர்பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ள அவர் எனினும் அரசவருமானங்கள் முற்றாக இல்லாமல் போனதே தற்போதைய நெருக்கடிக்கு காரணம்.

கொள்கை தவறு காரணமாக இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் கூடியவிரைவில் அதனை ஏற்றுக்கொண்டு தவறினை சரிசெய்தால் இந்த நெருக்கடியிலிருந்து விடுபடமுடியும்.

2020ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அரசாங்கம் முன்னெடுத்த வரிகுறைப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போதைய நெருக்கடி உருவாகதொடங்கியது. இதன் பின்னர் ஏற்பட்ட கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்ததை தொடந்து இந்த நிலை மேலும் மோசமடைந்தது.

2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அரச வருமானம் 29 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்வரும் காலங்களில் நிதிநிலைமை மேலும் மோசமடையும் எனவும் தெரிவித்துள்ளார்.