போதைப்பொருள் குற்றவாளிகள் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

போதைப்பொருள் குற்றவாளிகள் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

போதைப்பொருள் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது தொடர்பாக சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்ட கைதிகளுக்கு மன்னிப்பளிக்கும் முறைமையொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேநேரம் விளக்கமறியல் சிறைச்சாலையில் 29,000 கைதிகள் உள்ளதாகவும் அவர்களில் சுமார் 8000 பேர் போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.