இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்து

இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்து

இலங்கையில் ருபெல்லா மற்றும் தாயிலிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று பரவுவதை முற்றாக இல்லாதொழிக்கப்பட்டிற்கும் செயற்பாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் இரு நாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள டெட்ரோஸ் அதானோம், இந்த வெற்றிகள் அறிவியல் மற்றும் ஒற்றுமையுடன் நோய்களைத் தடுக்கலாம் மற்றும் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதற்கான சான்றுகள் என குறிப்பிட்டுள்ளார்.