
மாடறுப்புத் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேரணையில் ஏற்பட்ட திடீர்மாற்றம்!
இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதை அரசாங்கம் ஒருமாத காலத்துக்கு பிற்போட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் தொடர்புபட்ட குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுதவதை தடை செய்யப்போவதாக பிரதமர் தெரிவித்திருந்தார். இது தொடர்பான பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டிருந்தது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை எப்போது சமர்ப்பிப்பது என்பதை பிரதமர் தீர்மானிப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.