
யாழில் இன்றையதினம் பத்து கோடி பெறுமதியான பொருள் எரித்தழிப்பு
யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்றத்தில் ஏறத்தாழ பத்துக் கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 686 கிலோ நிறையுடைய, கஞ்சா போதைப்பொருள் இன்று எரித்து அழிக்கப்பட்டது.
இந்த கஞ்சாபோதைப்பொருள் சந்தேகநபர்கள் எவருமின்றி கைப்பற்றப்பட்டதாகும்
நீதிச்சேவை ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் மல்லாகம் நீதிமன்ற நீதிபதிகள் A.G. அலெக்ஸ்ராஜா, A.A. ஆனந்தராஜா , காங்கேசன்துறை தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் கமல் அபயசிறி , மல்லாகம் நீதிமன்றின் பதிவாளர்கள் , உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள் பிரசன்னத்துடன் இந்த சட்டவிரோத போதைப்பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன.
பொதுமக்களுக்கு இடையூறில்லாத வகையில் ஆள் நடமாட்டமற்ற கடற்கரைப் பிரதேசத்தில் இந்த அழிப்பு சம்பவம் இடம்பெற்றது.