
24 பேரும் விரைவில் நாடு திரும்புவார்கள்..!
பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அம்பாலாங்கொடை பிரதேச கடற்றொழிலாளர்கள் 24 பேரும் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி நான்கு நெடுநாள் மீன்பிடி படகுகளில்; தொழிலுக்கு சென்ற சுமார் 24 கடற்றொழிலாளர்கள் தவறுதலாக எல்லையைத் தாண்டி பங்களாதேஷ் கடற்பரப்பினுள் பிரவேசித்த நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களின் உறவினர்கள் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு கோரியுள்ளனர்.
இதனனையடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.