ஜனவரியில் நிவர்த்தி செய்யப்படும் - வெளிவந்த தகவல்

ஜனவரியில் நிவர்த்தி செய்யப்படும் - வெளிவந்த தகவல்

எதிர்வரும் ஜனவரி மாதம் சந்தையில் தற்போது மஞ்சளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும் என விவசாய ஏற்றுமதி திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் மஞ்சள் அறுவடை இடம்பெற்றதன் பின்னர் மஞ்சளுக்கான தட்டுப்பாடு நிவர்த்தியாகும்.

இந்த தகவலை விவசாய ஏற்றுமதி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.பி.ஹீன்கேந்த தெரிவித்துள்ளார்.

மஞ்சளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் சந்தையில் அதன் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.

இதேவேளை மஞ்சளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடை செய்யுமாறும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்குமாறும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.