வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பிரதிநிதிகளும் தனிமைப்படுத்தப்படுவர் – சுகாதார அமைச்சு

வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பிரதிநிதிகளும் தனிமைப்படுத்தப்படுவர் – சுகாதார அமைச்சு

பல்வேறு காரணங்களுக்காக வெளிநாட்டில் இருந்து வருகைத்தரும்  அனைத்து பிரதிநிதியும் இருவார கால கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு வருகைதர முன்னரும், வந்த பின்னரும் அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய தொற்று நோய் ஆய்வு பிரிவின் பிரதம தொற்று நோய் தடுப்பு வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பது முக்கியம் எனவும் அவர் மேலும் கூறினார்.