எட்டு பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸாருக்கு PCR பரிசோதனை

எட்டு பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸாருக்கு PCR பரிசோதனை

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குரிய எட்டு பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இன்று PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

டிக்கோயா நகர மண்டபத்தில் இந்த PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஹட்டன், வட்டவல, கினிகத்ஹேன, ஹோட்ன்பிரிஜ், நல்லத்தண்ணி, மஸ்கெலியா, நோர்வூட், பொகவந்தலாவை ஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், அவர்களின் கடமைக்கு தடையேற்படாத வகையில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள பிரதான நகரங்களை அண்டி பகுதிகளில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பலருக்கு இவ்வாறு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.