
மூன்றரை லட்சத்திற்கு 40 லட்சம் பெற்றுக்கொண்ட கலால் வரி திணைக்களம்..!
கலால் வரி சட்டத்திற்கு முரணான வகையில் வர்த்தகர் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள 3,650, 000 ரூபாய் அபராத தொகையை மீள செலுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கலால்வரி ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாவலபிட்டி பகுதியை சேர்ந்த மூவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவினை விசாரணை செய்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாவலபிட்டியில் இயங்கி வந்த மதுபான வர்த்தக நிலையத்தை சோதனையிட்ட கலால்வரி அதிகாரிகள் 50 இலட்சம் ரூபாவினை அபராதமாக செலுத்துமாறு கேட்டுக்கொண்டதோடு, 40 லட்சம் ரூபாவினை தண்டப்பணமாக செலுத்துமாறு அறிவித்துள்ளனர்.
கலால்வரி திணைக்கள சட்டத்திற்கமைய குறித்த தவறுக்கு அதிகபட்ச அபராதமாக 5 இலட்சம் ரூபாவே விதிக்கப்பட வேண்டும் என மனுதாரர்கள் தெரிவித்ததோடு, விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையானது சட்டவிரேதமானது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய வழக்கினை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் 350,000 ரூபாய் அபராதம் விதித்து எஞ்சிய தொகையை மீள செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.