காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்திய நால்வர் கைது...!

காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்திய நால்வர் கைது...!

பண்டாரகம அட்டுலுகம பகுதியில் கஞ்சா வர்த்தகம் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய சோதனைக்கு சென்ற காவல் துறை உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.