ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார்? பல உண்மைகளை வெளியிட்ட ஹக்கீம்

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார்? பல உண்மைகளை வெளியிட்ட ஹக்கீம்

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக நேற்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னிலையாகியிருந்தார்.

இதன் போது சஹ்ரான் ஹாசிமுக்கும் ஐ.எஸ். அமைப்பிற்கும் இடையில் நேரடி தொடர்புகள் எதுவுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார், நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்த வேறு ஒரு அமைப்பே ஈஸ்டர் தாக்குதல்களை மேற்கொண்டது என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி வேறு ஒருவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

எந்த அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தாலும் நாட்டை பலவீனப்படுத்தும் அவர்களின் நோக்கம் நிறைவேறியுள்ளது எனத் தெரிவித்ததோடு, குறிப்பிட்ட குழு சஹ்ரானையும் அவரது உறுப்பினர்களையும் இந்த தாக்குதலுக்காக பயன்படுத்தியது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த குழுவினர் தங்களை மறைத்துக்கொள்வதற்காக ஐ.எஸ் அமைப்பின் பெயரை பயன்படுத்தியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஊடகங்கள் இல்லாத நிலையில் குறிப்பிட்ட அமைப்பு எதுவென்பதை வெளிப்படுத்தமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.