
வவுனியாவில் 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக பலி
ஓமந்தை - நொச்சிமோட்டை கிராமத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 3 வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
தமது காணியை துப்புரவு செய்வதற்காக தாய், மகள் மற்றும் பேரபிள்ளைகள் இருவமாக 4 பேரும் சென்றிருந்த நிலையில் மரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்து இவர்களை கொட்டியுள்ளது.
இந்த நிலையில் அயலவர்கள் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி 3 வயது பெண் குழந்தை நேற்றிரவு (08) உயிரிழந்துள்ள நிலையில் தாய், மகள் மற்றும் குழந்தை ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.