பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து வாத்துவ - மொரந்துடுவ வீதியின் மெலேகம பகுதியில் இடம்பெற்றுள்ளது     

அதிர்ஷ்டவசமாக விபத்து நேர்ந்த போது இரண்டு பேருந்துகளிலும் பயணிகள் எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த இரண்டு பேருந்து சாரதிகளும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து | Two Buses Collide Head On In Moronthuduwa

சாரதி ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.