பொது மக்களுக்கான எச்சரிக்கை...!
சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த எச்சரிக்கை நாளை மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இன்று இரவு வேளைகளில் பலத்த மழை பெய்யும் பட்சத்தில் அத்தகல ஓயவில் சிறிய அளவிலான வெள்ளப்பபெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.