வாகரையில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த துயரம்!

வாகரையில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த துயரம்!

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குகனேசபுரம் கிராமத்தில் பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் சனிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.

ஆலம்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 06இல் கல்வி பயிலும் மாணவியான, 12 வயதுடைய, சன்முகநாதன் விஜயரூகினி எனும் மாணவியே இவ்வாறு பலியாகியுள்ளார்.

குறித்த நபரும் அவரது சகோதரியும் இன்று மாலை ஆலம்குளத்திற்கு குளிக்கச் சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.