கனரக வாகனத்துடன் மோதிய ஹயஸ்! தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்

கனரக வாகனத்துடன் மோதிய ஹயஸ்! தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்

கண்டி - திருகோணமலை பிரதான வீதியில் கனரக வாகனம் ஒன்றுடன் ஹயஸ் ரக வான் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று மாலை வேளையில் இடம் பெற்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

சீமெந்து அரைக்கும் ஆலை ஒன்றுக்கு சொந்தமான கனரக வாகனத்தின் பின்னால் - வான் ஒன்று மோதியதில் இச்சம்பவம் இடம்பெற்றது.

வாகனத்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன்,

சம்பவ இடத்துக்கு விரைந்த தம்பலகாம போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.