வவுனியா - ஓமந்தையில் பெண் ஒருவர் கைது!
வவுனியா - ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமோட்டை, மூன்றுமுறிப்பு பகுதியில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவரை நேற்று மாலை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஓமந்தை விசேட பொலிஸ் குழுவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஸ் டி சில்வா அவர்களில் வழிகாட்டலில் ஓமந்தை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் அருளானந்தம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஓமந்தை பாலமோட்டை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிளின் கீழ் பகுதியில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவினை கொண்டு சென்ற பெண்ணை கைது செய்துள்ளதுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த 42 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
கைது செய்யப்பட்ட பெண்ணை ஏழு நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினைபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.