கோட்டாபயவின் பக்கம் தாவும் முயற்சியில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள்!
அரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் போது எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் ஆளும் கட்சியுடன் இணையவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துவோரில் ஐக்கிய மக்கள் சக்தியின் சுமார் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் றிசார்ட் பதியூதீன் ஆகியோரை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வதில்லை என்ற கடுமையான நிலைப்பாட்டில் தற்போதைய அரசாங்கம் இருப்பதாக தெரியவருகிறது.
அதேவேளை முன்னாள் அமைச்சர்கள் பழனி திகாம்பரம், ராதாகிருஷ்ணன், மனோ கணேசன் உள்ளிட்டோர் ஆளும் கட்சியுடன் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.