500 கிலோ பீடி சுற்றும் இலைகளுடன் 6 பேர் கைது
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 500 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகளுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம்-மாரவில கடற்பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறிய படகொன்றிற்குள் 16 பொலித்தீன் பக்கெட்டுக்களில் குறித்த பீடி சுற்றும் இலைகள் பொதியிடப்பட்டிருந்த நிலையில், இதன்போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பீடி சுற்றும் இலைகளை கொண்டு செல்வதற்காக வருகைத் தந்திருந்த பாரவூர்தியின் சாரதி உள்ளிட்ட உதவியாளர்கள் இருவரையும் இதன்போது கடற்படையினர் கைது செய்துள்ளனர்.