
தனிமைப்படுத்தலுக்காக வழங்கப்பட்ட காணியில் இராணுவ முகாம்
ஹட்டன் – கொட்டகல பகுதியில் அத்துமீறி காணி கையகப்படுத்தப்பட்டமை தொடர்பில் 50 கோடி ரூபா நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோ , 02 கேர்ணல்கள், மேஜர் ஒருவர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தலுக்காக வழங்கப்பட்ட காணியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக காணி உரிமையாளர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணைக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு பிரதிவாதிகளுக்கு நீதவான் அறிவித்தல் பிறப்பித்துள்ளார்.