நேற்றைய கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நேற்றைய கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நேற்றைய தினம் 4 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இந்தியாவில் இருந்து நாடுதிரும்பிய 2 பேருக்கும், பிலிப்பைன்ஸ் கடலோடி ஒருவருக்கும், இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் கொரோனா தொற்றுறதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை, 3 ஆயிரத்து 115 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 18 பேர் நேற்று குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 907 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை, 196 ஆக உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.