பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள எச்சரிக்கை

பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள எச்சரிக்கை

மூக வலைதளங்களின் மூலம் விளம்பரங்களை பிரசாரம் செய்து, பண மோசடியில் ஈடுபடும் திட்டமிட்ட குழுக்கள் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறானவர்களிடம், சிக்கிக்கொள்ள வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்த மோசடி நடவடிக்கை தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் காவல்துறை தலைமையகம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

குறித்த திட்டமிட்ட குழுவின் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றவியல் பிரிவுக்கு அறிக்கையிட்டுள்ளதாகவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும் அண்மை நாட்களில் இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.