திருகோணமலை - படை முகாமில் ஏற்பட்ட அனர்த்தம்! ஐவர் வைத்தியசாலையில்..

திருகோணமலை - படை முகாமில் ஏற்பட்ட அனர்த்தம்! ஐவர் வைத்தியசாலையில்..

திருகோணமலை - சீனக்குடா விமான படை முகாமில் மின்சாரம் தாக்கி ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றையதினம் படை முகாமில் இடம்பெறவிருந்த நிகழ்வொன்றுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கிய ஐந்து விமானப்படை வீரர்களும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.