EPF உள்ளோருக்கு விசேட செய்தி

EPF உள்ளோருக்கு விசேட செய்தி

ஊழியர் சேமலாப நிதியின் (EPF) தற்போதைய மிகுதியையும் அதுதொடர்பான தகவல்களையும் தத்தமது கையடக்க தொலைபேசிக்கு குறுந்தகவலாக மாதம் தோறும் அனுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொ​ழில் தி​ணைக்கள ஆணையாளர் ஏ. விமலவீர இதை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தின் அடிப்படையில், தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்படுத்தப்பட்டு வந்த திட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியின் தற்போதைய இருப்பு தொடர்பான தகவல்களை, மாதாந்தம் தத்தமது கையடக்க தொலைபேசிக்கு குறுந்தகவலாக அனுப்பும் வேலைத்திட்டத்துக்கான நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

“பி” அட்டை இல்லாத சந்தர்ப்பத்திலும் ஊழியர் சேமலாப நிதியை ​இதன்மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.