அரச மற்றும் தனியார் துறையில் நடுத்தர வருமானம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

அரச மற்றும் தனியார் துறையில் நடுத்தர வருமானம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

அரச மற்றும் தனியார் துறையில் நடுத்தர வருமானம் பெறுவோருக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான திட்டமொன்று நடைமுறைக்கு வரவுள்ளது.

அரச மற்றும் தனியார் துறையில் பணியில் ஈடுபட்டுள்ள நடுத்தர வகுப்பின வருமான பயனாளிகளின் சேவைக்காக அவர்களின் வருமானத்திற்கு ஈடு கொடுக்கக்கூடிய வீட்டை பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் வீடமைப்பு திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2020.05.27 ஆம் திகதி அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதற்கு அமைவாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அடிப்படை மூலதனத்தை பெற்றுக் கொள்வதற்காக 5 வருட காலத்திற்கு செல்லுபடியான 25 பில்லியன் ரூபா கடன் பத்திரத்தை விடுவிப்பதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த பரிந்துரை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் வீடுகளை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஊடாக கடன் பத்திரத்தை செலுத்துவதற்கும், இந்த வீட்டை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட கொள்வனவாளர்களுக்கு 25 தொடக்கம் 30 வருடகால எல்லைக்கான நிவாரண கடன் குறைந்த கடன் வட்டி அடிப்படையில் அரச வங்கிகள் மூலம் வீட்டு கடனை வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.